நம்ம வடிவேல் சொல்ற மாதிரி ரூம் போட்டு யோசிச்சு பாத்தா பல விதமா எண்ணங்கள் ஓடுது அவருக்கு என்ன பரிசு வாங்குவதுனு. எத யோசிச்சாலும் ‘நீ அதுக்கு சரிப்பட மாட்ட’னு தான் தோனுது.
சரி எல்லா யோசனையும் தூக்கி ஓரமா வெச்சுட்டு நமக்கு தெரிஞ்ச தமிழ்ல ஒரு குட்டி கவிதையோ இல்ல கட்டுரையோ அவருக்கு எழுதி குடுக்கலாம்னு நினைச்சேன். தமிழ் நாட்டுல அதுவும் சங்கம் வளர்த்த மதுரைல பிறந்துட்டு ‘நமக்கு தெரிஞ்ச தமிழ்’னு ஏன் சொன்னேன்னா.. ஆமாங்க எனக்கு தமிழ் அவ்வளவா தெரியாது.. ஏன்னா பள்ளிக்கூடத்தில் இரண்டாம் மொழியாக எடுத்து படித்தது French.
சரி இப்போ அவர பத்தி —
திருமணம் ஆகி இத்தன வருசத்தில அவரோட பல முகங்கள பாத்தாச்சு - நண்பனா, காதலனா, கணவனா, தந்தையா, சக ஊழியனா, etc., சில சமயங்களில் சிறந்த எதிரியாய். ஆமாங்க நீங்க சரியா தான் படிச்சீங்க.. நம்மை விட நம்ம எதிரிக்கு தானே நம்மளுடைய பலமும் பலவீனமும் அதிகமா தெரியும்.
அப்படி அவருக்கு தெரிஞ்சதாலோ என்னவோ எங்க எங்க நான் தயங்கி நிப்பேனோ அங்கெல்லாம் உந்துதலா இருந்திருக்கிறார் எனக்கு தயக்கம் வருவதற்கு முன்பே..
என்னை சில விசயங்களில் திருத்துவதற்காக அல்லது எனது குணாதிசியங்களை மாற்றுவதற்காக அவருக்கே உரிதான பாணியில் நடந்திருக்கிறார். அதில் பல முறை தோற்றாலும் சில முறை வெற்றி தான்.. அந்த வெற்றி யாருக்கு என்று நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள்.
அவர பத்தி பக்கம் பக்கமா எழுதலாம் கால அவகாசம் காரணமாக இப்படியே முடித்து கொள்கிறேன்.